டெல்லி : நாடு முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,549 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விடுத்துள்ள புள்ளி விவர அறிக்கையில், “நாட்டில் இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 பேர் கரோனா பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க கரோனா பெருந்தொற்று வைரஸிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்து 106 ஆக குறைந்துள்ளது.
இதுவரை கரோனா வைரஸிற்கு 5 லட்சத்து 16 ஆயிரத்து 510 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்று மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோருடன் ஒப்பிடுகையில் நாட்டில் கோவிட் பரவல் 0.06 சதவீதம் ஆக உள்ளது. அதேநேரம் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு மீள்வோர் விகிதம் 98.74 ஆக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.