ஹம்பி: கர்நாடகா மாநிலத்தில் உள்ள பாரம்பரியமிக்க ஹம்பி நகரில் கடந்த 27ஆம் தேதி "ஹம்பி உற்சவம்" என்ற கலை, கலாச்சார திருவிழா தொடங்கியது. மாநில சுற்றுலாத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் இறுதிநாளான நேற்று(ஜன.29) இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், பத்மஶ்ரீ விருதுபெற்ற பாடகர் கைலாஷ் கேர் பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது இசை நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தண்ணீர் பாட்டிலை எடுத்து பாடகர் கைலாஷ் மீது வீசினர். பாடகர் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.