தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வங்காள விரிகுடாவில் சிங்கப்பூர்-இந்திய கடல்சார் கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்’ 2022 - Singapore India Maritime Bilateral Exercise

வங்காள விரிகுடாவில் சிங்கப்பூர்-இந்திய கடல்சார் கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்’ 2022 அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடக்கிறது.

வங்காள விரிகுடாவில் சிங்கப்பூர்-இந்திய கடல்சார் கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்’ 2022
வங்காள விரிகுடாவில் சிங்கப்பூர்-இந்திய கடல்சார் கூட்டு நடவடிக்கை ‘சிம்பெக்ஸ்’ 2022

By

Published : Oct 28, 2022, 6:34 PM IST

டெல்லி:இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி, ‘சிம்பெக்ஸ்’-2022 இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2022 அக்டோபர் 26, 27ஆம் தேதிகளில் விசாகப்பட்டின துறைமுகப் பகுதிகளில் நடைபெற்றது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று (அக்டோபர் 28) முதல் 30 ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது. சிங்கப்பூர் குடியரசின் கடற்படையைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் ஸ்டால்வார்ட் என்ற போர்க்கப்பலும், ஆர்எஸ்எஸ் விஜிலென்ஸ் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கப்பலும் இந்த கூட்டு நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக கடந்த 2022 அக்டோபர் 25 ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்கு வந்தடைந்தது.

சிங்கப்பூர் குடியரசு கடற்படையை சேர்ந்த கப்பற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் சீன் வாட் ஜியான்வென் மற்றும் இந்தியாவின் கப்பற்படை தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தாவை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி சந்தித்து இருநாட்டு தொடர்பான பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினர்.

இந்த கூட்டு நடவடிக்கையில் திறன்மிக்க நிபுணர்கள் குழு இருநாட்டு கடற்படை சார்ந்த முக்கிய முடிவுகள் தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. கடந்த 1994 ஆம் ஆண்டு சிம்பெக்ஸ் கூட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது சிங்க ராஜா கூட்டு நடவடிக்கை என்று அழைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த கூட்டு நடவடிக்கையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதன் நோக்கமானது இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வாகனங்களில் விரைவில் இணைய வசதி..! எலான் மஸ்க்கின் புதிய திட்டம்..!

ABOUT THE AUTHOR

...view details