தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் - தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா - தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை

புதுச்சேரி: தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தில் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல்

By

Published : Dec 22, 2020, 10:25 PM IST

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா தலைமையிலான குழு இன்று (டிச.21) மாலை புதுச்சேரி வந்தது.

தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்த இந்தக் குழு புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின்குமார் மாநில தலைமை தேர்தல் அலுவலர் சுர்பீர் சிங் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் புதுச்சேரி நூறு அடி சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு

இக்கூட்டத்தில், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், அதிமுக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தேர்தல் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்து தங்கள் கருத்துகளை மனுவாக அளித்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா, வாக்காளர்கள் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் கூறியுள்ளதால். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் தான் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தில் கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க:'அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திமுக முயற்சி' - முதலமைச்சர் குற்றச்சாட்டு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details