சிக்கிம்-நேபாளம் எல்லைக்கு அருகே நேற்றிரவு 8.49 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது வங்கதேசம், அஸ்ஸாம், பிகாரின் வேறு சில பகுதிகளிலும் உணரப்பட்டது. அதேபோல, நேபாளம், பூட்டானின் சில பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துவருகிறார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிகார், அஸ்ஸாம், சிக்கிம் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) காலை 3.42 மணியளவில், அஸ்ஸாமின் தின்சுகியா பகுதியருகே 2.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கேரளா தேர்தல் ஒரு பார்வை