தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீக்கிய பூசாரியின் கால் துண்டிப்பு: மர்ம நபர்களைத் தேடும் போலீசார் - பஞ்சாப் தாக்குதல்

பஞ்சாப் மாநிலம், பன்னியா கிராமத்தில், சீக்கிய பூசாரியின் காலை வெட்டி துண்டித்த மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Sikh priest attack
சீக்கிய பூசாரி மீது தாக்குதல்

By

Published : Mar 31, 2023, 10:44 PM IST

பன்னியா: பஞ்சாப் மாநிலம், தார்ன் தரன் மாவட்டம், பன்னியா பகுதியில் குருத்வாரா உள்ளது. இங்கு பூசாரியாக பணியாற்றி வருபவர் சுக்செயின் சிங் (32). இவர் தான் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பூசாரி சுக்செயின் சிங் நேற்று (மார்ச் 30) இரவு வழக்கம் போல் குருத்ராவில் இருந்துள்ளார். அப்போது அங்கு வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வந்துள்ளனர்.

திடீரென சுக்செயின் சிங்கை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள், அவரது காலை வெட்டி துண்டித்தனர். மேலும் அவரது கைகளையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் அலறிய சுக்செயினின் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதல் நடத்திய நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தப்பியோடிய நபர்களை பிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" எனக் கூறினர். இதேபோல் கடந்த ஜனவரி மாதம், உதய்பூரில் உள்ள திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிப்லாப் குமார் டெப்பின் வீட்டுக்கு சென்ற பூசாரிகள் மீது, சிலர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ''சர்டிபிகேட் கேட்டது குத்தமா?'' - பிரதமரின் கல்விச்சான்றினை RTI-யில் கேட்ட கெஜ்ரிவாலுக்கு ஃபைன்!

ABOUT THE AUTHOR

...view details