டெல்லி: இந்தியாவில் இதுவரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 96.5 லட்சத்தைக் கடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பலர் குணமடைந்திருப்பினும், மக்கள் மேலும் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் இந்திய மருந்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு மருந்து நிறுவனங்கள் கரோனா தடுப்பு மருந்தினைத் தயாரிக்கும் முனைப்பில் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் தடுப்பு மருந்து மூன்றாம்கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றதையடுத்து, இந்தத் தடுப்பூசி இந்தியாவில் புனேவிலுள்ள சீரம் நிறுவனத்தால் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. தற்போது இந்தத் தடுப்பு மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியுடன் பல்வேறு பகுதிகளில் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.