தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.225 ஆக குறைப்பு! - கோவிஷீல்டு தடுப்பூசி விலை குறைப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.225 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

Aadar Poonawalla
Aadar Poonawalla

By

Published : Apr 9, 2022, 4:37 PM IST

ஹைதராபாத் : தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியை ரூ.225க்கு இனிவரும் காலங்களில் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் தகவலை சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “மத்திய அரசுடன் ஆலோசித்த பின்னர், தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை ஒரு டோஸுக்கு ரூ.600இல் இருந்து ரூ.225 ஆக மாற்றியமைக்க சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா (SII) முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். ஆதார் பூனவல்லாவின் இந்த முடிவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : உயர்த்தப்பட்ட பீஸ்ட் டிக்கெட் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details