டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசி தற்போது புனேவை தளமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தியை அதிகரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கிய சீரம் நிறுவனம் - கோவிஷீல்ட் தடுப்பூசியின் உற்பத்தி
கோவிஷீல்ட் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்தின் உதவி வரும் வரை காத்திருக்காமல், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) நிறுவனம் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளது.
நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதி அமைச்சகம் இந்தியாவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துவரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி, ரூ.1500 கோடி வீதம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தொகை உரிய நிறுவனங்களுக்கு செல்ல கால தாமதம் ஆகிய நிலையில், சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கத்தின் உதவி வரும் வரை காத்திருக்காமல் வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, அரசாங்கம் அளிக்கவுள்ள தொகை இந்த வாரத்திற்குள் எங்கள் கைகளுக்கு வரும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை இருமடங்காக உயர்த்திய அந்நிறுவனம், நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தடுப்பூசிகள் சில்லறை வர்த்தகத்தில் மக்களுக்கு கிடைக்கும் எனவும் கூறியது.