உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அஸ்டராஜெனெகா மருந்து நிறுவனம், கரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசியை தயார் செய்யும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வைரஸிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்பதை இறுதி கட்ட சோதனையின் தரவுகளில் தெரியவந்தால், குறைந்தது 10 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முடிவுசெய்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடமிருந்து அவசர அங்கீகாரத்தைப் பெறக்கூடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(எஸ்ஐஐ) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.