மான்சா: சித்து மூஸ்வாலாவின் உடல் மான்சா மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சித்து படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்பாக பஞ்சாப் காவல்துறையினர் அடையாளம் தெரியாத சிலரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா சென்ற மே 29 அன்று மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். சித்து படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அவரது ரசிகர்களும், பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.