பெங்களூரு:கர்நாடகா மாநிலம் விஜயபுராவில் உள்ள ஞானயோகேஸ்வரா மடத்தில் மடாதிபதி சித்தேஷ்வர் சுவாமி (81) உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு (ஜன.2) காலமானார். இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஆசிரம வளாகத்தில் மாலை 5 மணி வரை வைக்கப்படும் என்றும், அதன்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானயோகேஸ்வரா மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி காலமானார் - கர்நாடக அரசு
கர்நாடகாவின் ஞானயோகேஸ்வரா மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவரது மறைவையொட்டி விஜயபுரா மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்தேஷ்வர் சுவாமியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்தி மோடி தனது ட்விட்டர் பதிவில், “பரமபூஜ்ய ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, சமூகத்திற்கு செய்த சிறந்த சேவைக்காக நினைவு கூரப்படுவார். அவர் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார். அவரது புலமை ஆர்வத்திற்காகவும் மதிக்கப்பட்டார். இந்த நேரத்தில், என் எண்ணங்கள் அவரது எண்ணற்ற பக்தர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் தொடங்கிவைக்கிறார்