பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜூன் 12ஆம் தேதி தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன் விருந்து நடப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அதனடிப்படையில் ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். அதில் பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூரும் ஒருவர். இந்த வழக்கை பெங்களூரு நகர கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.