பெங்களூர்: நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ஆம் தேதியான நேற்று தாக்கல் செய்திருந்தார்.
அந்த பட்ஜெட் அறிக்கைத் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா அவரது கருத்துகளைப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் விவசாயிகள், பெண்கள் மற்றும் பெரும்பான்மையான மக்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தியளிப்பதாக இல்லை.
"அந்த பட்ஜெட்டில் நான் பெரிதும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களே அதிகம் எதிர்பார்ப்புகளைக் கொண்டு இருந்தனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்புகளும் வீணாகிவிட்டன"
குறிப்பாக, சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான சில சிறப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் "வெளியிடப்படவில்லை" என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.
பட்ஜெட் பூர்த்தியளிக்கவில்லை
'எனது கருத்துப்படி, ஒரு நாட்டின் பட்ஜெட்டானது பசி, வறுமை, வேலையின்மை ஆகியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதற்கான அறிகுறிகளும் இல்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரியைக் குறைப்பதால், எளிய மக்களின் மீது விதிக்கப்படும் வரி அதிகரிக்கும். மத்திய அரசு கார்ப்பரேட்களுக்கே சாதகமானதாக உள்ளது’ என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
விவசாயிகள் ஏமாற்றம்: 'இதனால் மேலும், வருகிற ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.2%இல் இருந்து பட்ஜெட் மதிப்பில் குறையும் என்று இந்த பட்ஜெட் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, விவசாய உரங்களுக்கான மானியத்தொகை ரூ.1.40 கோடியாக இருந்தது. வரும் நிதியாண்டில் ரூ.1.05 லட்சம் கோடியாகக் குறையும். இதன் விளைவாக விவசாயத்திற்கான உரச் செலவு கணிசமான அளவில் அதிகரிக்கும்.
பெங்களூரைப் பொறுத்தவரையில், நகரத்தின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ள புறநகர் ரயில்வே திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை' என்றும் அவர் கூறினார்.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசிற்கு மானியம் கொண்டுவர தாக்கல் செய்யவேண்டும் என்றும் சித்த ராமையா குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: பிரபாஸின் 'ராதே ஷியாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு