உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகரில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார், ராம் சுதர் யாதவ்.
இவர் நேற்று (டிச.8) நடைபெற்ற முழு கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது பகுதியிலிருந்த கடைகளை மூட வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று வைரலானதை அடுத்து அவர் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டார்.
லக்னோவின் காவல் ஆணையர் டிகே தாகூர்,”சோனு குப்தா, சுபம் குப்தா ஆகியோரின் இனிப்பு கடையை, பாரத் பந்த் என்ற பெயரில் மூட வலியுறுத்தியதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஹஸ்ரத்கஞ்சின் காவல் துணை ஆணையர் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது”என்றார்.