தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விபத்தில் படுகாயமடைந்த மத்திய அமைச்சர் உடல்நிலை சீரடைந்துவருகிறது - அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உடல்நிலை

விபத்துக்குள்ளான அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வென்டிலெட்டர் சிகிச்சையிலிருந்து அவர் வெளியே கொண்டுவரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபத் நாயக்
ஸ்ரீபத் நாயக்

By

Published : Jan 14, 2021, 9:50 AM IST

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கர்நாடக மாநிலத்திற்கு குடும்பத்தினருடன் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் உதவியாளர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நாயக் கோவாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவரது உடல்நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு தொடர்ந்துகண்காணித்துவருகிறது. அத்துடன், அமைச்சரின் உடல் நிலைக்குறித்தும் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கேட்டறிந்தார். இந்நிலையில், ஸ்ரீபத் நாயக் உடல் நிலை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், வென்டிலெட்டர் சிகிச்சையிலிருந்து அவர் வெளியே கொண்டுவரப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசம், ரத்த அழுத்தம் உள்ள முக்கிய கூறுகள் உரிய முறையில் உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயர் சிகிக்சைக்காக அவரை டெல்லி கொண்டுசெல்ல வேண்டியத் தேவை ஏதுமில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ABOUT THE AUTHOR

...view details