உலகளவில் கோவிட்-19 தாக்கம் காரணமாக நிலவும் உளவில் சிக்கல் குறித்து யுனிசெப் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. சிறார்கள், இளைஞர்களை மையப்படுத்தி இந்த ஆய்வை யுனிசெப் மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.
ஏழு பேரில் ஒருவருக்கு மன அழுத்தம்
இந்த ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் ஏழு பேரில் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மன அழுத்தத்துடன் புறக்கணிப்பு, வன்முறை போன்ற துயர்களையும் சிறார்கள் அனுபவிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது.
மன்சுக் மாண்டவியாவின் கருத்து
இந்த ஆய்வு தொடர்பாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், "இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் மனநல சிக்கல் அதிகரித்துவருகிறது.
கிராமப்புற விவசாய வாழ்வியலில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உரையாடும் வழக்கம் இருக்கும். ஆனால் தற்போது கூட்டுக்குடும்பம் சிதைந்து, தனிக்குடித்தனம் அதிகரிப்பது தனிமையை உணர்வை அதிகரிக்க செய்து, மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
இந்த கோவிட்-19 பெருந்தொற்றானது இந்த சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் மன நலன் குறித்து கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. எனவே, யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற பழக்கங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:குஜராத் உள்ளாட்சித் தேர்தல் - பாஜக அமோக வெற்றி