மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவரின் மாநிலங்களவை உறுப்பினருக்கான பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கிடைத்த புதிய பதவி... வாழ்த்து தெரிவித்த வெங்கையா நாயுடு! - வெங்கையா நாயுடு
டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மல்லிகார்ஜூன கார்கே
இந்நிலையில், துணை குடியரசு தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான வெங்கையா நாயுடுவை மல்லிகார்ஜூன கார்கே, இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து துணை குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "துணை குடியரசு தலைவர் மாளிகையில் வெங்கையா நாயுடுவை மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்தித்துப் பேசினார். கார்கேவுக்கு புதிய பதவி கிடைத்ததற்கு வெங்கையா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்" என பதிவிடப்பட்டுள்ளது.