டெல்லி: டெல்லியில் லிவிங்டுகெதர் காதலனால் கொல்லப்பட்ட ஷ்ரத்தா 2020ஆம் ஆண்டு உடலில் ஏற்பட்ட உள் காயங்களுக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷ்ரத்தா, அந்த மருத்துவமனையில் 2020இல் டிசம்பர் 3 முதல் 6 வரை அனுமதிக்கப்பட்டு, உள்காயங்களுக்காக சிகிச்சைப் பெற்றுள்ளார்.
மும்பை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாரா ஷ்ரத்தா? - வெளியான பகீர் தகவல்
டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா கடந்த 2020ஆம் ஆண்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள அந்த மருத்துவமனை ஓசோன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையில் ஷ்ரத்தாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், ‘ஷ்ரத்தா கடுமையான முதுகு வலி (spondylosis and trauma) மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்பட்டிருந்தார்’ எனத் தெரிவித்தார். இதற்கிடையில் ஷ்ரத்தாவின் மூக்கு மற்றும் கன்னங்களில் காயம் இருப்பது போன்று உள்ள அவரது போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க:ஷ்ரத்தா கொலை வழக்கு - அஃப்தாபுக்கு மேலும் 5 நாட்கள் போலீஸ் காவல்!