டெல்லி:தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா 35 துண்டுகளாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்த அப்தாப் அமீனை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் பல்வேறு தகவல்களை வெளிக் கொணர்ந்தனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 13 எலும்புத் துண்டுகளை கைப்பற்றிய போலீசார் அவை ஷ்ரத்தாவின் எலும்புகளா என டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் மெஹ்ராலி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டின் மரபணுவும், ஷ்ரத்தாவின் தந்தையுடைய மரபணுவும் ஒத்துப்போவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஷ்ரத்தாவின் செல்போன் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தேடுதல் பணி நடைபெறுவதாகவும், எலும்புத் துண்டுகள் கைப்பற்றிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட துணிகள் ஷ்ரத்தாவினுடையதா என்றும் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:100-வது நாளை தொட்ட இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு