ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகரில் வசித்து வந்தவர் சரோஜ். இவரது கணவர் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கடந்த டிச.11ஆம் தேதி மாலை இளைஞர் அனுஜ், தனது அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர், ஆள்நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தி வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட அதே நாளில், சரோஜின் மகள் பூஜாவை அழைத்து, சரோஜை காணவில்லை என்றும் இது குறித்து வித்யாதர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் சரோஜை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக அனுஜ் பூஜாவிடம் கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜா, அனுஜ் கூறியதை நம்பவில்லை. கடந்த டிச.13ஆம் தேதி அனுஜுக்குத் தெரியாமல் பூஜா அனுஜின் வீட்டிற்குச் சென்றார். அப்போது, அனுஜ் தனது சமையலறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்துள்ளார். இதனைக் கண்ட பூஜா, எப்படி இங்கு ரத்தம் வந்தது எனக் கேட்டுள்ளார்.