சாஹிப்கன்ஜ்: டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு போலவே, பல வழக்குகள் சமீப காலமாக அதிகம் நடந்து வருகிறது. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியைக் கொடூரமாக கொன்று, அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (டிச.17) மாலை வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. பெண்ணின் உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மோப்ப நாய்களை கொண்டு தேடுதலில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறனர். கிடைத்த பாகங்களை வைத்து மருத்துவ குழு உடற்கூராய்வு மேற்கொண்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட தில்தார் அன்சாரி தலைமறைவாக உள்ளதால், அவரது குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.