கொப்பல்: கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி நகரில், முஸ்லீம் மதத் தலைவரான வசீர் அலி கோனா 30 ஏழை இந்து ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்தார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும் தனது சொந்த செலவில் இந்த ஏற்பாட்டை செய்தார்.
அதன்படி நேற்று(நவ.30) குஷ்டகியில் உள்ள மகாகாளி அம்மன் கோயிலில் இந்து முறைப்படி 30 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் முஸ்லீம் மதத்தினர் முன்னிலையில், எளிமையான முறையில் திருமணம் நடந்தது.