ஹைதராபாத்: தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களைக் கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் தங்கள் தேர்வுகளைச்செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான 'குறுகிய கால முதலீடுகளின்' பக்கம் செல்லும்போது, சரியான திட்டங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான், அவர்களின் கடினச் சம்பாத்தியத்திற்கு எந்த நஷ்டமும் ஏற்படாமல் உத்தரவாத வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும்.
முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், ஒவ்வொரு வருங்கால முதலீட்டாளரும் அவர்களின் ஒட்டுமொத்த தேவைகளைக் கருத்தில் கொண்டு நிதி இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நீண்ட காலத் திட்டங்கள் நல்ல பலனைத் தரும், அதேசமயம், குறுகிய கால முதலீடுகள் தேவை என நினைக்கும் போதெல்லாம் பணத்தை பெறும் வசதி உடையதாக உள்ளது. எனவே, பாதுகாப்பான குறுகிய கால முதலீடுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.
தற்செயல் நிதியாக திறம்பட செயல்படுவதால் 'திரவ நிதிகள்' (Liquid Funds) குறுகிய கால முதலீடாக தேர்ந்தெடுக்கப்படலாம். வங்கிக் கணக்குகளில் சேமிப்பு வைப்புத்தொகையுடன் ஒப்பிடும்போது அவை சற்று சிறந்த வருமானத்தை அளிக்கின்றன. திரவ நிதிகள் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. அவற்றை முதலீட்டுத் தேதியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம். இதன் மூலம் வரியைத் தாண்டி நான்கு முதல் ஏழு விழுக்காடு வட்டி வரை பெற இயலும்.