கான்பூர்: பித்னு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காதேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேர் சிங் (52). இவர் அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளார். குபேர் சிங்கின் மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவர் திருமணமான மகளின் வீட்டிற்கு அருகே வசித்து வந்தார். வேலையின் காரணமாக மருமகன் வெளியூர் சென்று விட்டார்.
கடந்த 4 நாட்களாக குபேர் சிங் மளிகைக் கடையைத் திறக்காததால், அப்பகுதி மக்கள் குபேர் சிங்கின் மகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, குபேர் சிங்கின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.