டெல்லியில் ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளைக் கணக்கெடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருள்கள் வாங்காமல் இருப்பவர்களின் கார்டுகள் முடக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மக்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டம் ஒன்றை டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டிவருகிறது. இதன் நோக்கம் ஏழை மக்கள் பயன் அடைய வேண்டும், ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றுவிடாமல் தடுக்க முடியும் என்பதே.
ஆனால் அம்மாநிலத் துணைநிலை ஆளுநர் அனுமதியளிக்க மறுத்துவிட்டதால் இந்தத் திட்டம் அப்படியே நின்றுவிட்டது.