ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, 8 கரோனா நேயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். உடனடியாக, மருத்துவர்களும், ஊழியர்களும் தீவிர சிகிச்சை பிரிவை லாக் செய்துவிட்டு, மருத்துவமனையிலிருந்து ரகசியமாக வெளியேற தொடங்கினர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி... ரகசியமாக வெளியேறிய மருத்துவர்கள்!
சண்டிகர்: ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 8 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததை வெளியே சொல்லாமல், மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்சிஜன்
மருத்துவர்களின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த நோயாளிகளின் உறவினர்கள், எமர்ஜென்சி வார்ட்டுக்கு சென்று பார்த்தபோது தான் உண்மை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.