பீகார்:தர்ஹார் அவுட்-போஸ்ட் காவல் நிலையத்தில், காவல் அதிகாரியாக வேலை செய்பவர் ஷசிபூஷன் சின்ஹா. அவரிடம் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனை விடுவிக்கச்சொல்லி பெண் ஒருவர் சென்றுள்ளார். அவருடைய மகனை விடுவிப்பதற்கு தான் உதவுவதாக கூறிய ஷசிபூஷன் சின்ஹா தான் சொல்வதை செய்தால் மட்டுமே அது முடியும் எனக் கூறியுள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட அந்த பெண்ணை உடல் மசாஜ் செய்யச்சொல்லி தகாத செயலில் ஈடுபடுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவல் அதிகாரி ஒரு வழக்கறிஞரிடம் தொலைபேசியில் பேசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் மகனை விடுவிக்க அவருக்கு உதவுமாறு பேசுகிறார்.
சின்ஹா வழக்கறிஞரிடம் பேசும் போது, “அந்தப் பெண் ஏழை என்றும், சில வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட மகனின் விடுதலைக்கு அவளுக்கு உதவி தேவை என்றும்; தங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ, அதை தான் அனுப்புகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த ஏழைப் பெண்ணுக்கு உதவி செய்ய தான் 10,000 ரூபாய் வரை செலவு செய்வேன் எனவும் காவல் அதிகாரி கூறுகிறார்.