ஷிவ்புரி (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. தேர்தல் குறித்து ஆலோசிக்க அலுவலர்கள் , ஷிவ்புரி மாவட்ட கூடுதல் ஆட்சியரும், மாவட்ட துணைத் தேர்தல் அலுவலருமான உமேஷ் பிரகாஷ் சுக்லாவை சந்தித்துள்ளனர். அங்கு அவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், " வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததால் என்ன இப்போது? இன்று வரை வாக்களித்து என்ன செய்தீர்கள்? எத்தனை ஊழல் தலைவர்களை உருவாக்கியுள்ளீர்கள்? ஜனநாயகம் நாட்டின் மிகப்பெரிய தவறு" என்று அதில் பதிவாகி உள்ளது.