மும்பை:வட மகாராஷ்டிராவிலுள்ள ஜால்கோன் பகுதியில் சிவசேனா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய சஞ்சய் ராவத் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடியை டெல்லியில் தனியாக சந்தித்த மறுநாள் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருக்கவேண்டும் என எப்போதும் நினைப்பேன் எனக் குறிப்பிட்ட ராவத், எதையும் பெறமுடியவில்லை என்றாலும், தற்போது முதலமைச்சராக சிவ சேனாவினர் உள்ளனர் என்பதை பெருமையாக கூறலாம் என்றார்.