மும்பைஅந்தேரி கிழக்கு தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே புதன்கிழமை இரவு (மே11) மாரடைப்பால் காலமானார். 52வயதுடைய இவர் தனது நண்பரை சந்திப்பதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் ஷாப்பிங் சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு எம்எல்ஏ ரமேஷ லட்கே உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அனில் பராப், “நாங்கள் இப்போது அவரது உடலைப் பெற முயற்சிசெய்து வருகின்றோம்” என்றார்.