இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும், சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டி அனைத்து மாநில அரசுகளுடனும் கோவிட்-19 நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கரோனா: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க சிவசேனா வலியுறுத்தல் - கோவிட்-19
மும்பை: கோவிட்-19 நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில் கரோனா நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
Shiv Sena demands special Parliament session to discuss COVID situation
மேலும், "நான் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுடன் இது குறித்து பேசிவருவதால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்ட வலியுறுத்துகிறேன். அவர்கள் தங்களது மாநிலங்களில் கோவிட்-19 நிலைமை மிகவும் கடுமையாக உள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர்.
அதனால், அரசு சிறப்புக் கூட்டத்தொடருக்கு அழைப்புவிடுத்தால் அங்கு அனைத்து மாநிலங்களின் கரோனா நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதிக்கலாம்" என சஞ்சய் ராவத் தெரிவித்தார்.