விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள சினகடிலியில் உள்ள வடக்கு ஷீரடி சாய் பாபா கோயிலில் சாய் பாபாவின் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. தத்ரூபமாக நிஜம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மனிதரைப் போலவே, பேசுவதற்கு வாயை நகர்த்துவதும், தலையை அசைப்பதும், இயற்கையான முகபாவனைகளுடன் தலையை அசைத்துப் பேசுவது, சாய் பாபாவே ஒரு தெய்வீக ரோபோவாக பூமிக்கு வந்தது போல் உள்ளது எனப் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பக்தர்களுடன் பேசும் சிலிக்கான் சாய் பாபா.. ஆந்திராவில் குவியும் மக்கள்!
ஆந்திராவில் பக்தர்களுடன் பேசும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஷீரடி சாய் பாபா ரோபோவை காண பொதுமக்கள் குவிகின்றனர்.
இந்த ரோபோ சாய் பாபாவை Au நுண்கலை மாணவர் ரவிச்சந்த் மூன்று வருடக் கடின உழைப்புக்குப் பிறகு, உருவாக்கியுள்ளார். இந்த ரோபஓவின் முகம் சிலிக்கானாலும், மீதமுள்ள பாகங்கள் கனடாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கண்ணாடியிழைகளால் செய்யப்பட்டன. நவீனத் தொழில்நுட்பம் மூலம் பேசுவதற்காக, குரலும் சேர்க்கப்பட்டுள்ளது . இந்த சாய் பாபாவின் தெய்வீக ரோபோவை காண அக்கோயிலுக்கு விசாகப்பட்டினம் மட்டுமின்றி அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களின் வருகை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஈரோடு வனப்பகுதியில் தரையிறங்கிய ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர்!