மங்களூர்(கர்நாடகா):122 மீட்டர் நீளமுள்ள சரக்கு கப்பல் ஒன்று கடந்த வியாழக்கிழமை காசராகோடு கடல்பகுதியில் டீசல் தீர்ந்து, ஜெனரேட்டர்கள் செயலிழந்த நிலையில் தவித்தது. கப்பலில் இருந்த பணியாளர்கள், கப்பலின் உரிமையாளருக்கும், இந்திய கப்பற்படைக்கும் தகவல் தெரிவித்தனர். தொழில்நுட்பக்குழுவினருடன் ஹெலிகாப்டரில் சென்ற கப்பல் படையினர், ஜெனரேட்டர்களை சரிசெய்ய உதவினர்.
சீரற்ற வானிலை நிலவிவந்த நிலையிலும், கடற்படையினர் ஹெலிகாப்டரில் சென்று கப்பலில் இருந்த 14 பேருக்கு தேவையான உதவிகளைச் செய்தனர். இந்நிலையில், அந்த சரக்கு கப்பலானது பாதுகாப்பாக மங்களூர் துறைமுகத்துக்கு இன்று காலை பாதுகாப்பாக வந்துவிட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.