தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் விண்ணில் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி! - ஒரிசாவில் வான் பரப்பில் துல்லியமாக குறியை தாக்கி அழிக்ககூடிய ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசாவில் தரையில் இருந்து வான் நோக்கி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய விஎல்-எஸ்ஆர்எஸ்ஏஎம் ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஏவுகனை சோதனை வெற்றி
ஏவுகனை சோதனை வெற்றி

By

Published : Jun 25, 2022, 9:48 AM IST

Updated : Jun 25, 2022, 6:28 PM IST

ஒடிசா: மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து செங்குத்தாக வான் நோக்கி சென்று வான் பரப்பில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய விஎல் - எஸ்ஆர்எஸ்ஏஎம் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இது குறித்து பேசிய அதிகாரிகள் ஏவுகணை சோதனையில் சரியான நேரத்தில் குறித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த வகை ஏவுகணை, வான்வெளி மற்றும் இதர போரக்கப்பல்களின் தாக்குதலிலிருந்து நமது கப்பலை பாதுகாக்கும் வல்லமை கொண்டதாகும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் ”ஏவுகணை சோதனை வெற்றிக்காக கடற்படைக்கும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துக்கும் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்த வெற்றி இந்திய கடற்படைக்கு மேலும் வழு சேர்க்கக்கூடிய வகையில் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார். .

மேலும் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி-4 ஏவுகணை இந்தமாத தொடக்கத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆன் பிராங்க்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டைரி குறிப்பை எழுதிய சிறுமி - டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது கூகுல்

Last Updated : Jun 25, 2022, 6:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details