தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜப்பான் முன்னாள் பிரதமர், தருண் கோகாய், ராம் விலாஸ் பாஸ்வான்...' பத்ம விருதுகளின் முழு பட்டியல் இதோ! - ஷின்சோ அபே

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அஸ்ஸாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்பட 119 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம வருதுகளின் முழு பட்டியல்
பத்ம வருதுகளின் முழு பட்டியல்

By

Published : Jan 26, 2021, 12:03 AM IST

பொது வாழ்க்கை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய 119 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது வாழ்க்கையில் சிறப்பான சேவையை ஆற்றியதற்காக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைத்துறையில் மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியன், சுதர்சன் சாஹூ ஆகியோருக்கும், மருத்துவத் துறையில் பங்காற்றியதற்காக பெல்லா மோனப்பா ஹெக்டேவுக்கும் பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த நரிந்தர் சிங் கபனிக்கும், ஆன்மீகத்திற்காக மவுலானா ஒஹிதுதீன் கானுக்கும் பத்ம விபூஷன் விருது அளிக்கப்படவுள்ளது. தொல்லியல் துறைக்காக பி.பி. லாலுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் கே.எஸ். சித்ரா, அஸ்ஸாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய், சுமித்ரா மகாஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேஷூபாய் படேல் உள்ளிட்டவர்களுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர் கம்பாரா, நிருபேந்திர மிஸ்ரா, கல்பே சாதிக், ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷெராஃப், தர்லோச்சன் சிங் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படவுள்ளது. பி. அனிதா, சுப்பு ஆறுமுகம், சாலமன் பாப்பையா, பாப்பம்மாள், பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், கே.சி. சிவசங்கர், மராச்சி சுப்புராமன், பி. சுப்பிரமணியன், திருவேங்கடம் வீரராகவன், ஸ்ரீதர் வேம்பு உள்பட 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details