கேரளாவில் கரோனா பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், `ஷிகல்லா (Shigella)' என்ற புதிய வகை பாக்டீரியா கேரளாவில் பரவி வருவது அம்மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாக்டீரியா தொற்று ஏற்படும் நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி ஆகியவை அறிகுறிகளாக ஏற்படுகிறது. எனினும் சிலர் அறிகுறியில்லாமலேயே இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனையடுத்து கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியா தொற்றால் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தொற்றால் பாதிக்கப்பட்ட 11 மாத குழந்தை கடந்த வாரம் உயிரிழந்தது.
இந்நிலையில் தற்போது பாலக்காடு மாவட்டத்திலும் ஷிகல்லா பாக்டீரியாவின் முதல் வழக்கு பதிவாகியுள்ளது. பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி போட்டிவிளை கிராமத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தைக்கு ஷிகல்லா பாக்டீரியா தொற்று இருப்பது உறுதியாகியாகியுள்ளது. இதனையடுந்து அந்த குழந்தை கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க...பரிசோதனைக்காக பாதுகாக்கப்படும் உன்னாவ் சிறுமிகளின் உறுப்புகள்