கரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. நாட்டில் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
சசி தரூருக்கு கரோனா தொற்று - கரோனா வைரஸ்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ச்ஃப்ட
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பரிசோதனை மேற்கொள்ள நேரம் கேட்டு 2 நாள்கள் காத்திருந்த பிறகு, முடிவுக்காக ஒன்றரை நாள்கள் காத்திருந்து இறுதியாக நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன். எனது சகோதரியும், 85 வயதான தாயும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.