மகாராஷ்டிரா பால்சாராவில் உள்ள பிரீச் காண்டி மருத்துவமனையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று அனுமதிக்கப்பட்டார். 80 வயதான அவருக்கு பித்தப்பையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சரத் பவாரின் உடல்நிலை குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட்! - லேபராஸ்கோபி
மும்பை: பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் உடல்நிலை சீராக உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
சரத் பவார்
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு இன்று பித்தப்பையில் லேபராஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் பழைய நிலைக்கு மீண்டுவருகிறார்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 30ஆம் தேதி, பித்த நாளத்தில் உள்ள கல்லை நீக்குவதற்காக சரத் பவாருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏழு நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரை செய்தனர்.