டெல்லி: மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல், மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவருகின்றன.
இந்நிலையில் மம்தா பானர்ஜியை ஆதரித்து சரத் பவார் அடுத்த வாரம் பரப்புரையில் ஈடுபடுகிறார். அதன்படி, ஹோலி பண்டிகைக்கு பின்னர் அவர் மேற்கு வங்கத்தில் மூன்று நாள்கள் தீவிர பரப்புரையில் அவர் ஈடுபடுகிறார். மேற்கு வங்கத்தை பொருத்தமட்டில் காங்கிரஸ் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்நிலையில் சரத் பவார் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்து பரப்புரையில் ஈடுபடவுள்ளது காங்கிரஸ் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்க்க வலிமையான கூட்டணி அமைக்க வேண்டும். காங்கிரஸ் கரைந்துவருகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலிமையாக எதிர்க்காவிட்டால் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது” என்று கூறியிருந்தது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தவிர தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஜேஎம்எம் (ஹேமந்த் சோரன்) மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி உள்ளது. மாநிலத்தில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க : சக்கர நாற்காலி வேலை செய்யாது- மம்தாவை சீண்டும் பாஜக!