தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புராந்தரில் சர்வதேச விமான நிலையம்...மத்திய அமைச்சரை சந்தித்த சரத் பவர்! - sharad pawar meets rajnath singh

டெல்லி: புராந்தரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சரத் பவர் கலந்துரையாடியுள்ளார்.

சரத் பவர்
சரத் பவர்

By

Published : Dec 9, 2020, 5:33 PM IST

தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார், புராந்தரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அப்போது, விமான நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரத் பவாரின் ட்விட்டர் பதிவில், "புராந்தர் சர்வதேச விமான நிலையம் குறித்து விவாதிக்க டெல்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தேன்.

புனே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விமான போக்குவரத்து சேவையை குறைப்பதற்காக புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்தது. எனவே, புராந்தர் விமான நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்" எனப் பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details