தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று(மே.2) வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 148 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 87 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைத்திட தேவையான பெரும்பான்மையை திமுக கைப்பற்றிவிட்டதால், அண்ணா அறிவாலயத்தில் தற்போதே கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.