மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில், மம்தா தலைமையிலான திருணாமூல் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கும் மம்தாவுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், " தேர்தலில் மகாத்தான வெற்றிப்பெற்றுள்ள மம்தாவுக்கு வாழ்த்துகள். மக்களின் நலனுக்காகவும், தொற்றுநோயை கையாள ஒன்றிணைந்து செயல்படுவோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மம்தாவுக்கு சரத்பவார் வாழ்த்து மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.