ஹரியானா: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) பெண்களும் சேர மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. அதன்படி தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்வதற்கான தேர்வு, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதில், ஹரியானா மாநிலம், ரோஹ்தாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஷனான் டாக்கா என்ற மாணவி நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார். ஷனான் டாக்காவின் தந்தையும், தாத்தாவும் இந்திய ராணுவத்தில் சேவையாற்றியதாகவும், அவர்களது சேவையால் ஈர்க்கப்பட்ட ஷனானும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் இந்தத் தேர்வை எழுதியதாகவும் தெரிகிறது. ஷனான் தனது பள்ளிப்படிப்பை ராணுவப்பள்ளிகளில் முடித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.