டெல்லியில் கடந்த 71 ஆண்டுகள் இல்லாத வகையில், இந்த மாதம் கடுமையான குளிர் மாதமாக இருந்துவருகிறது. சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக இருக்கிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 6) அதிகாலை டெல்லியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் அதிகாலை கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது - ஐஎம்டி தகவல் - ஐஎம்டி
டெல்லி: தலைநகரில் இன்று (டிசம்பர் 6) அதிகாலை கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐஎம்டி அறிக்கையின்படி,நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியஸ் ஆகும். அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலை 14.8 டிகிரி செல்சியஸாக பதிவுசெய்யப்பட்டது. அந்த வகையில், இன்றைய குறைந்தபட்ச வெப்பநிலை 13 டெக் செல்சியஸ், அதிகபட்சம் 26 டெக் செல்சியஸ் எனக் கணித்துள்ளனர்.
மேலும், குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் ஸ்வெட்டர் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்துவருகின்றனர். பல பகுதிகளில், மக்கள் நெருப்பு மூட்டி அமர்ந்துவருகின்றனர். டெல்லியில் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையில்தான் இருந்துவருகிறது.