ஐதராபாத்:இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் இன்று (செப். 7) திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஷாருக்கானின் ரசிகர்கள் படத்தின் முதல் காட்சியை காண திரையரங்குகளுக்கு திரண்டனர்.
ஷாருக்கின் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் மற்றும் படத்தின் முன்பதிவு எண்களின் அடிப்படையில் ஜவான் படத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் கையில் ஜவான் படத்தின் பேனர் ஏந்தி "வீ லவ் ஷாருக்" (we love sharuk) என கோஷமிட்டு திரையரங்கிற்கு செல்லும் காட்சியை இணையத்தில் பகிர்ந்து உள்ளனர்.
இந்த பதிவை நடிகர் ஷாருக்கான் அதிகாலையிலேயே தனது எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்து, "படம் உங்களை என்டர்டைன் பண்ணிருக்கும் என்று நம்புறேன். நீங்கள் படத்திற்கு செல்வதை காண முழித்திருந்தேன். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி" என குறிப்பிட்டு உள்ளார்.