சத்தீஸ்கர் மாநிலம் பெமெதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக வன்கொடுமை, பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின்கீழ் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்தார். தன் மீதான இந்தப் பாலியல் வன்புணர்வு வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் புகாரளித்த பெண்ணின் கணவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
இந்த வழக்கானது சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரவன்ஷி, 18 வயதுக்கு மேற்பட்ட தம்பதியில் ஒருவர் மற்றொருவருடன் கட்டாய பாலியல் உறவு வைத்துக்கொண்டால், அதை பாலியல் வன்புணர்வாகக் கருத முடியாது எனக் கூறி கணவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தார்.