மங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குலை பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ் (33). இவர், பள்ளி மாணவன் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்து பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதனை வெளியில் கூறினால் தேர்வு மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு ஆக.1 ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு செப்.6ஆம் தேதி வரை இச்சம்பவம் நடந்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மாணவருக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்ட நிலையில் நடந்த சம்பவங்களைத் தனது பெற்றோர், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நடந்த விவகாரத்தை மருத்துவரிடம் கூறிய நிலையில் அதற்கேற்ப சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.
இதையும் படிங்க:திருமண விழாக்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப காப்புரிமை பிரச்சினையா? மத்திய அரசின் சூப்பர் விளக்கம்!
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சுரத்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் செலுவராஜ், விசாரணையைத் தொடங்கினார். தொடர்ந்து, மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பிரித்விராஜை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.