Sexual harassment: திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்தில் பணிபுரியும் உயர் அலுவலர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் செயல்பாட்டு அலுவலர் (Operating Officer) மதுசூதன கிரி ராவ் மீது அங்கே ஒரு மாதமாகப் பணிபுரியும் பெண் ஒருவரால் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், ராவ் தன்னை அவரது இல்லத்திற்கு வரவைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் கடந்த ஜனவரி 4ஆம் தேதி நடந்தேறியதாகத் தெரிகிறது.