தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தை ஆபத்தில் தள்ளிய ஆக்சிஜன் நெருக்கடி - Uttar Pradesh news

கோவிட்-19 இன் முதல் அலையிலிருந்தே நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில் இரண்டாவது அலை நாட்டு மக்களை மேலும் பாதித்துள்ளது. இது ஏதோ ஒரு விதத்தில் ஒரு வகையான அழிவை ஏற்படுத்திவருகிறது. கரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தது தற்போது உணரப்படுகிறது.

oxygen
oxygen

By

Published : Apr 20, 2021, 1:46 PM IST

லக்னோ: இன்று உ.பி. அரசாங்கத்தின் முன் நிற்கும் மிகப்பெரிய சவால், கரோனா வைரசிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு மிகவும் தேவைப்படும் ஆக்சிஜனை. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் எளிதாகக் கிடைக்க செய்வது தான். ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்வதற்காக மக்கள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோத கறுப்பு சந்தையாளர்கள் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். எதையும் செய்ய முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கும் நிலையில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மக்கள் சந்தையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கரோனா நோய்த்தொற்றின் வேகம் மாநிலத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலம் முழுவதும் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகியுள்ளன.

ஏராளமான கரோனா பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், மாநிலத்தின் சுகாதார அமைப்புகள் முற்றிலும் செய்வதறியாது உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து மருத்துவமனைகளும் நெரிசலில் சிக்கியுள்ளன. புதிய நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. படுக்கைகள் இருந்து நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட இடங்களில், ஆக்சிஜன் கிடைக்காதததால் அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் மட்டுமல்ல, மாநில ம் முழுவதும் நிலவுகிறது. கோவிட்-19 க்கு எதிரான போரில் தோல்வியுற்ற நோயாளிகள் மற்றும் உறவினர்களின் அலறல் மாநிலத்தின் சுகாதார அமைப்பின் ஆரோக்கியத்தையும் அரசாங்கத்தின் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகின்றன. கரோனாவின் அதிகரித்து வரும் பாதிப்புகளுக்கு மக்களின் அலட்சியமும் ஒரு காரணம் என்றாலும், அரசாங்கத்தின் முன்னேற்பாடுகளின் உள்ள குறைபாடுகளை புறக்கணிக்க முடியாது. மக்கள் தீவிர மருத்துவ உதவி தேவையினால் இறந்து கொண்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் பரப்புரைக்கு மொத்த அமைச்சரவையும் பரபரப்பாக உள்ளது.

லக்னோவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

தலைநகர் லக்னோவில் கரோனா வைரசின் நிலை நாளுக்கு நாள் பயமுறுத்துகிறது. கோவிட் -19 மருத்துவமனைகளில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பியுள்ளன. சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் இல்லாததால், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகளின் ஆரோக்கியமும் மோசமடைந்து வருகிறது. நகரின் ஆக்சிஜன் ஆலை ஒவ்வொரு நாளும் 4,500 சிலிண்டர்களை நிரப்பும் திறன் கொண்டது, அதே நேரத்தில் தேவை 5,500 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், லக்னோவில் மட்டும் 5,551 பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 22 பேர் உயிர் இழந்துள்ளனர்.

வாரணாசியில் 70 விழுக்காடு நோயாளிகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் கிடைக்கிறது

கடந்த 24 மணி நேரத்தில், வாரணாசியில் 1,597 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், திங்கள்கிழமை காலை 11 மணி வரை 1,148 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 16,143 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், நேற்று இரவு 7 மணி வரை 10 பேர் உயிர் இழந்தனர். இதற்கிடையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 2011 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 1200 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. இருப்பினும், ஆக்சிஜன் கிடைப்பதைப் பொறுத்தவரை, தேவைப்படும் நோயாளிகளில் 70 விழுக்காடு பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. தற்போது சாண்டவுலியின் ஆக்சிஜன் ஆலையில் இருந்து சப்ளை வருகிறது என்று மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார். புதிய ஆலை மிர்சாபூரிலும், மற்றொரு ஆலை மத்திய பிரதேசத்தின் ரேவாவிலும் இயங்கி வருகிறது, அங்கு இருந்து தினமும் 200 முதல் 300 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 3250 சிலிண்டர்கள் ஆர்டர் செய்யப்படுவதாக அவர் கூறினார்.

ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு

மதுராவில் நோயாளிகளுக்காக 600 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது

மதுராவில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 454 புதிய நோயாளிகள் அதிகரித்தகாகவும் அதே நேரத்தில் இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக இதுவரை 133 பேர் உயிர் இழந்துள்ளனர். மறுபுறம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை நோயாளிகளுக்கு 600 படுக்கைகளை ஒதுக்கியுள்ளது. மாவட்டத்தில், தினமும் 18 முதல் 20 சிலிண்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

மருத்துவ கருவிகளின் தட்டுப்பாட்டை சரிபார்க்க முதல்வர் யோகி அறிவுறுத்தல்

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருந்துகள் அல்லது மருத்துவ கருவிகளுக்கு தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். ரெம்டெசிவர் மருந்து வாங்குவதற்கான கோரிக்கை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட இருக்கிறது. அதே சமயம், மருந்துகளின் விநியோகச் சங்கிலிக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைகளின் ஆக்சிஜன் கையிருப்பு

அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அடுத்த 15 நாட்களுக்கு தேவைக்கு ஏற்ப ஆக்சிஜனின் இருப்பு பராமரிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தது 36 மணிநேர ஆக்சிஜன் கையிருப்பு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

24 மணி நேரத்தில் 30,596 புதிய நோயாளிகள், 129 இறப்புகள்

இதுவரை, கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிக எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 30,596 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர், பாதிக்கப்பட்ட 129 பேர் இறந்தனர். அதே நேரத்தில், 9041 நோயாளிகள் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் நோய்த்தொற்று விகிதம் 12.93 விழுக்காட்டை எட்டியுள்ளது, ஏப்ரல் 14 அன்று இது 9.76 விழுக்காடாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 2,36,492 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, மொத்தம் 3,82,66,474 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் 24 மணிநேரத்தில் 2.73 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, 2,73,810 புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,50,61,919 ஆக உள்ளது. அதே நேரத்தில், 24 மணி நேரத்தில் நிகழ்ந்த 1,619 இறப்புகள் உட்பட தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,78,769 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 19,29,329 ஆகவும், குனமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821 ஆகவும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details